வில்பத்து தேசிய பூங்காவானது நாட்டின் ஏனைய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளைப் போல பல அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொள்கிறது; சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு, வனவிலங்குகளை வேட்டையாடுதல், காடழிப்பு, தொல்லியல் தளங்களை சேதப்படுத்துதல், ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் பரவுதல், கடல்சார் சூழல் மாசடைதல், மற்றும் மனித-வனவிலங்கு உட்பூசல்கள்.
உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், வில்பத்து தேசிய பூங்கா பிப்ரவரி மாதம் 2010 ஆம் ஆண்டு பொதுமக்களின் மற்றும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டது. மற்றும் சுற்றுலாப்பயணிகள் பார்வையிடச் செல்லும் பிரதான இடமொன்று என்ற நிலையைப் பெற அது மீண்டும் தயாராக உள்ளது. சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக இலங்கை அரசாங்கத்தினால் இப்பகுதியானது இயற்கை பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.