மீன்இனங்கள் பக்கம்

அறிமுகம்

நிலத்தில் வாழும் உயிரினங்களின் உணவு வலையில் ஒரு முக்கிய இணைப்பாக இருப்பதனால், பூங்காவில் உள்ள மீன் இனங்கள் பருவகால மற்றும் வற்றாத நீர்நிலைகளில் காணப்படுகின்றன. இதில் இயற்கை (ஆறுகள், நீரோடைகள், ஏரிகள்) மற்றும் மனிதனால் அமைக்கப்பட்ட (குளங்கள்) வாழ்விடங்கள் அடங்கும். ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 2 அயல்நாட்டு இனங்கள் உட்பட இருபத்தி ஒன்பது (29) நன்னீர் மீன்கள் இப் பூங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

fish in wilpattu

வில்பத்துவில் காணப்படும் மீன்கள்

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான பல்லுயிரியலைக் கொண்டது.

பூங்காவில் வாழும் முதல் 5 வகையான மீன்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

வில்பத்துவில் காணப்படும் மீன்கள்

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான பல்லுயிரியலைக் கொண்டது.

பூங்காவில் வாழும் முதல் 5 வகையான மீன்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

Hora-Dandiya-(Horadandia-atukorali)

பச்சை ஊரி / பச்சை தலைக் கெண்டை

(ஹோராடாண்டியா அட்டுகோரலி)

பச்சை ஊரி ஒரு உள்ளூர் நன்னீர் மீன் இனமாகும். இதன் உடல் சுமார் 2 செ.மீ நீளம் கொண்டது, இது இலங்கையின் மிகச்சிறிய நன்னீர் மீன் ஆகும். இதன் வயிற்றுப்பகுதி வெள்ளி நிறத்திலும் முதுகுப்புறம் பச்சை நிறத்திலும் மேலும் நீளமான உடலையும் கொண்டிருக்கும்.

இது ஈரமான மற்றும் அயனமண்டலங்களிலேயே காணப்படும். இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஈரமான மற்றும் வறண்ட மண்டலங்களின் தாழ் நாட்டில் காணப்படும்.
வில்பத்துவில் இந்த இனம் வற்றாத ஏரிகளில் மட்டுமே வாழ்கின்றது. ஏரிகள் மற்ற நீர்நிலைகளுடன் இணைக்கப்படாததால், வில்பத்து தேசிய பூங்காவில் வாழும் இவ்வினம் தனிமைப்படுத்தப்பட்டு தனித்துவமிக்கதாக காணப்படுகிறது.

மேலும், இந்த இனத்தின் மொத்த எண்ணிக்கையும் வில்பத்து தேசிய பூங்காவிற்குள் மட்டுமே முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. இம் மீன் இனம் எதிநோக்கும் முக்கிய அச்சுறுத்தல் காலநிலை மாற்றமாகும், ஏனெனில் வரட்ச்சியான காலநிலையின் போது ஏரிகள் முழுவதுமாக உலர்ந்து விடக்கூடும்.

Sri-Lanka-Filamented-Barb-Dawkinsia-singhala

இலங்கை செவ்வலி
அல்லது
இலங்கை மச்சக் கெண்டை

(டவ்கின்சியா சிங்களா)

இலங்கை செவ்வலி உள்ளூர் நன்னீர்மீன் இனமாகும். அதிகபட்ச அளவு சுமார் 9 செ.மீ. வரை வளரும். பிரதானமாக இவற்றின் வளர்ந்த மீன்களுக்கு குத துடுப்புக்கு மேலே கருப்பு நிறக் கறை அல்லது மச்சம் போன்ற அமைப்பு இருக்கும். இளம் மீன்கள் உடலில் மூன்று கருப்பு பட்டைகள் மற்றும் வால் பகுதி துடுப்பு மடலின் இரு முனைகளிலும் சிவப்பு புள்ளிகளுடன் வித்தியாசமாக நிறத்தில் காணப்படும்.

மீன் முதிர்ச்சியடையும் போது இவை மங்கி மறைந்துவிடும், குத துடுப்புக்கு மேலே உள்ள கருப்பு கறை மட்டுமே இருக்கும். முதிர்ந்த ஆண் மீன்களுக்கு முதுகுத்தண்டு துடுப்புகள் நீளமாக காணப்படும். இந்த இனம் நாட்டின் ஈர மற்றும் அயனமண்டலங்களில் காணப்படுகிறது.
வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கலா ஓயா, மோதரகம் ஆறு மற்றும் மனிதனால் அமைக்கப்பட்ட பிற குளங்களில் இவை பரவிக் காணப்படுகின்றன.

இவற்றை இயற்ககையாக வேட்டையாடும் நுகரிகளாக நீர்வாழ் பறவைகள் மற்றும் நீர்க்கீரி ஆகியவை காணப்படுகின்றன. பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் மீன்பிடி நடவடிக்கைகளிலும் இவை சிக்குகின்றன.

இலங்கை செம்மஞ்சள் கெண்டை

(லேபியோ லங்கா)

இது ஒரு உள்ளூர் மீன் இனமாகும். அதிகபட்ச நீளமாக இம் மீன் 35 செ.மீ வரை வளரும் என பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக சுமார் 15 செ.மீ வரை மட்டுமே இவை வளரும். இந்த இனத்தின் உடலின் மேற்புறம் ஆலிவ்-பச்சை நிறத்தில் காணப்படும்.

துடுப்புகள் மற்றும் வால் என்பன செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும். பிரதானமாக இதன் வால் பகுதியில் கருப்பு கறையொன்று காணப்படும். இந்த இனம் நக்கல்ஸ் தொடர், வறண்ட மண்டலத்தில் உள்ள குளங்கள் உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் காணப்படுகிறது. மேலும், வடமேற்கில், வில்பத்து தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவிலும் இது காணப்படுகிறது.

shark-catfish-wallago-attu

வாளை கெளுத்தி

(வாலாகோ அட்டு)

இது ஒரு உள்நாட்டு இனமாகும், மேலும் பாகிஸ்தானிலிருந்து இந்தோனேசியாவிற்கும் வடக்கிலிருந்து வியட்நாமிற்கும் பரப்பலடைந்துள்ளது. இது வேட்டையாடும் பெரிய கெளுத்தி இனமாகும், இது சுமார் 2 மீ நீளம் வரை வளரக்கூடியது என்று அறியப்படுகிறது, ஆனால் இதன் சராசரி நீளம் சுமார் 60 செ.மீ ஆகும்.

இது ஆலிவ்-பச்சை நிறத்திலான உடலுடன் இளம் தங்க நிற முதுகுடன் காணப்படும் . உடலின் கீழ்புறப் பகுதி வெள்ளி கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும். இலங்கையின் தாழ்நிலங்கள் முழுவதும் வாளைக் கெளுத்தி மீன்கள் பரவலாக வாழ்கின்றன. இந்த இனம் நன்னீர் சூழலில் வேட்டையாடுமொரு உயர்மட்ட நுகரியாகும்.

இது புல்வெளியினை கரைகளாகக் கொண்ட நீர்வாழ் தாவரங்கள் வளரும் மற்றும் மெதுவாக பாயும் நதிகளின் சேற்றின் அடிப்பகுதியில் வாழவே விரும்பும், மேலும் சிறிய மீன்கள், மெல்லுடலிகள் மற்றும் ஓட்டுமீன்கள் ஆகியவற்றை இரையாக உட்கொள்ளும். இது பந்தயத்திற்காக பிடிக்கப்படும் மீனாகும் மற்றும் வில்பத்து தேசிய பூங்கா மற்றும் கலா ஓயாவில் உள்ள குளங்களில் காணப்படுகிறது.

இது ஒரு முக்கியமான நன்னீர் உணவு மீனாகும். இருப்பினும், ஆறுகள் மற்றும் ஆழமான பாறைக் குளங்களில் மீன் பிடிக்க வெடிபொருட்களைப் பயன்படுத்துவதாலும் மற்றும் இவற்றை கட்டுப்பாடின்றி அதிகமாக அறுவடை செய்வதாலும், இவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதனாலும் இன்று இவை மிகவும் அரிதாகி வருகின்றன.

Giant / Great Snakehead (Channa marulius)

பூவிரால்

(சன்னா மாருலியஸ்)

பூவிரால் என்பது ஒரு பெரிய மாமிசஉண்ணி மீனாகும், இது சுமார் 80 செ.மீ வரை வளரும். இது பாகிஸ்தானிலிருந்து சீனாவிற்கும் தெற்கில் இருந்து தாய்லாந்திற்கும் பரப்பலடைந்துள்ளது. இலங்கையில் இது தாழ்நாட்டு பகுதி முழுவதும் மற்றும் 500 மீ உயரத்திலும் பரம்பலடைந்துள்ளது.

முதிர்ந்த பெரிய மீன்கள் பழுப்பு நிறத்தில் இருந்து கறுப்பு நிறமாகவும், சாம்பல்-மஞ்சள் நிறமாகவும் காணப்படும். சிறிய மீன்களின் வால் மீது கருப்பு கோடுடைய ஒரு மஞ்சள் புள்ளியை அவதானிக்கலாம்.

மீன்கள் வளரும் போது இந்த புள்ளி மங்கி மறைந்துவிடும். இந்த இனம் மிகவும் மூர்க்கமானவை மற்றும் பிற மீன்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடியவை.

இவ் இனங்கள் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் ஆழமான பகுதிகளில் நீர்தாவரங்கள் வளரும் இடங்களில் வாழ விரும்புகின்றன, மேலும் இம் மீன்கள் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன. வாழ்விடங்களின் அழிவு, அதிக அறுவடை மற்றும் நீர்நிலைகள் மாசடைதல் ஆகிய காரணங்களால் இம் மீன்களில் பெரியவை அரிதாகி இவ்வினம் அழிவினை நோக்கி பயணிக்கின்றது. வில்பத்தில் இவை குளங்களிலும், அருகிலுள்ள ஆறுகளிலும் காணப்படுகிறது.

வேடிக்கையான உண்மை

giant-snakehead
Shopping Basket
WNP

FREE
VIEW