வில்பத்து தேசிய பூங்காவில் 623 க்கும் மேற்பட்ட வகையான பூச்செடிகள் உள்ளன, அவை பூங்கா முழுவதும் மாறுபட்ட நிலப்பரப்புகளையும் வாழ்விடங்களையும் சுற்றி பரவலடைந்துள்ளன.
ஆப்பிரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் முதல் கடற்கரையில் உள்ள மந்தாரை வகைகள் அல்லது சதுப்புநில தாவரங்கள் வரையிலான இந்த அனைத்து தாவரங்களும் பல வகையான வனவிலங்குகளுக்கு வாழ்விடமாகவும் வாழ்வாதாரமாகவும் காணப்படுகின்றன. பூங்காவின் வெவ்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை எதிர்கொள்ளும் தாவரங்களில், குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காணலாம்.