வில்பத்து தேசிய பூங்கா பற்றி
வில்பத்து தேசிய பூங்காவின் வரலாறு
இப் பகுதியானது பல புராணக்கதைகள் மற்றும் இதிகாசங்களுடன் தொடர்புடையது என்பதனையும் மேலும் பூங்காவிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் காணப்படும் நீர்ப்பாசன மற்றும் பிற புராதன இடிபாடுகளையும் அப் பண்டைய நாகரிகத்தின் சான்றுகளாகவும் குறிப்பிடலாம்.
கி. மு. 500 ஆண்டுகளுக்கு முன்னர், மன்னன் விஜயன் குதிரைமலைப் பகுதியில் அமைந்துள்ள தம்பபன்னியிற்கு (சமஸ்கிருதத்தில் “சிவந்த மண்” என்று பொருள்) வந்து இறங்கினான். மேலும் பல இடங்களிலிருந்து பாலியோலிதிக் மற்றும் மெசோலிதிக் காலகட்டத்திற்கான சான்றுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1980 களின் நடுப்பகுதியிலிருந்து 2010 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்நாட்டுப் போரினால் இப் பூங்காவானது பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது மேலும் தற்போது வில்பத்து தேசிய பூங்காவின் உள்கட்டமைப்புகள் புனர்நிர்மாணிக்கப்படுகிறது மற்றும் அதன் புகழ்பெற்ற கடந்த காலத்தை மீண்டும் மீட்டெடுக்கும் நோக்கத்துடன் அதன் நிர்வாக அமைப்புக்களும் பலப்படுத்தப்பட்டுவருகிறது
நிர்வாகத் திட்டம்
வில்பத்து தேசிய பூங்காவின் நிர்வாக திட்டம் பல குறிக்கோள்களைக் கொண்டுள்ளது; இலங்கைப் பல்லுயிரியலின் நயமான பிரதிநிதித்துவமாக பூங்காவை பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல், பூங்காவின் இயல்புநிலையினை பேணுவதற்கான இலக்குகளை பாதிக்காத வண்ணம் பார்வையாளர்களுக்கு தனிப்பட்டதொரு புதுமையான அனுபவத்தை வழங்கல் என்பன இதில் அடங்கும். மேலதிக தகவல்களுக்கு 2019-2024 காலகட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட நிர்வாக திட்டத்தினை வாசியுங்கள்.
பூங்காவில் ஈடுபடக்கூடிய செயற்பாடுகள்
வனச்சுற்றுலா (Safari), முகாமிடுதல் (camping), விண் நோக்குதல் (Star gazing) மற்றும் பறவைகளை பார்வையிடல் போன்ற செயற்பாடுகளில் எவற்றில் நீங்கள் பூங்காவில் ஈடுபடலாம் என்பதைக் கண்டறியவும்.
இது உங்களுக்கு இலங்கையின் வனப்பகுதிகளை அதன் இயல்பான நிலையில் ஆராய்ந்திட ஓர் அரிய சந்தர்ப்பமாகும்.
பூங்காவில் ஈடுபடக்கூடிய செயற்பாடுகள்
வனச்சுற்றுலா (Safari), முகாமிடுதல் (camping), விண் நோக்குதல் (Star gazing) மற்றும் பறவைகளை பார்வையிடல் போன்ற செயற்பாடுகளில் எவற்றில் நீங்கள் பூங்காவில் ஈடுபடலாம் என்பதைக் கண்டறியவும்.
இது உங்களுக்கு இலங்கையின் வனப்பகுதிகளை அதன் இயல்பான நிலையில் ஆராய்ந்திட ஓர் அரிய சந்தர்ப்பமாகும்.
- 01.
கேம்பிங் - 02.
வனச்சுற்றுலா - 03.
சொகுசுமனைகளில் தங்குதல்
கேம்பிங்
சுதந்திரமாக உலாவும் வனவிலங்குகளுக்கிடையே முகாமிடுதல்
துணிகரச்செயல்களில் மிகவும் ஆர்வமிக்கவர்களுக்கு குளமொன்றுக்கு அருகிலோ அல்லது நதிக்கரைக்கு அருகிலோ வெளிப்புறத்தில் கூடாரமொன்றில் முகாமிட்டு இரவைக் கழிப்பதன் மூலம் சவாலான அனுபவத்தைப் பெறவுதற்கென வில்பத்து தேசிய பூங்காவானது, சில குறிப்பிட்ட தளங்களை வழங்குகின்றது. நீங்கள் முகாமிட்டு தங்குவதற்கு தேவையான கூடாரங்கள், சாதனங்கள் மற்றும் சமையல் பாத்திரங்களை நீங்களே கொண்டு வர வேண்டும்.
சுற்றுலாமனைகளை மற்றும் முகாம்களை முன்கூட்டியே பதிவு செய்திட வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தை தொடர்புகொள்ளவும்.
வனச்சுற்றுலா
வனச்சுற்றுலா
கையில் இருக்கும் நேரத்தைப் பொறுத்து, அரை நாள் அல்லது முழு நாள் வனச்சுற்றுலாவிற்கான ஜீப் வண்டியினை பெற்றுக்கொண்டு, சில மணிநேரங்களை பூங்காவிற்குள் செலவழித்து இலங்கையில் உள்ள சில அரியவகை உயிரினங்களை அல்லது இலங்கைக்கே உரித்தான இப் பூங்காவில் வாழும் பெரிய 3 பாலூட்டிகளான இலங்கை யானை, தேன் கரடி மற்றும் சிறுத்தை என்பனவற்றை பார்வையிடுங்கள்.
மேலும் பறவையியல் ஆர்வலர்கள் வில்பத்து தேசிய பூங்காவில், புலம்பெயர்ந்தவை உட்பட 150 க்கும் மேற்பட்ட பறவை இனங்களை பார்வையிடலாம். அங்கு மனம்கவரக் கூடிய ரம்மியமான பல கடற்பரப்புகள் உள்ளன குறிப்பாக குதிரைமலைக்கு அருகாமையில், மற்றும் நீங்கள் அங்கு ஏரியொன்றுக்கு அருகில் சிறிது நேரம் செலவிடுவதோடு அங்கு வருகைதரும் விலங்குகளையும் பார்வையிடலாம்.
சொகுசுமனைகளில் தங்குதல்
சொகுசுமனைகளில் தங்குதல்
பூங்காவில் ஈரநிலத்திற்கருகிலோ, குலத்திற்கருகிலோ அல்லது நதிக்கரையிலோ அமைந்துள்ள 7 சொகுசுமனைகளில் ஒன்றையோ அல்லது சகல வசதிகளையும் கொண்ட தங்குமிடத்தையோ தேர்வு செய்யலாம். வனவிலங்குகளை உங்களுடைய தங்குமிடங்களுக்கு அருகில் கண்டு ரசிக்கலாம், மேலும் வண்டுகளின் இரைச்சல்களையும் வனவிலங்குகள் எழுப்பும் விநோதவொலிளையும் கேட்ட வண்ணம் நீங்கள் விண் நோக்கும் போது நட்சத்திரங்களையும் ரசித்து மகிழலாம்.
சுற்றுப்புறச் சூழல்
வில்பத்து 1938 ஆம் ஆண்டில் வனவிலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது, இது வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இலங்கைக்கே உரித்தான மற்றும் தனித்துவமான பல்லுயிரியலின் சான்றுகளை பாதுகாக்க பூங்காவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகவும் முக்கியமானவையாகும். பூங்காவிற்கு வருகை தருவதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் மற்றும் நிலவமைப்பு பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
எம் மக்கள்
பராமரிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என இப் பூங்காவின் சீரான இயக்கத்திற்கு திரைக்குப் பின்னால் இருந்து செயற்படுபவர்களையும் நீங்கள் இங்கே சந்திக்கலாம். வில்பத்து தேசிய பூங்காவை அதன் உயிரியல் பொக்கிஷங்களுக்கான புகலிடமாக மாற்றும் பாராட்டுக்குரியவர்கள், இவர்கள் தான்.
வனசீவராசிகள் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் ஹன்விலகாமாவில் உள்ள பூங்கா தலைமையகத்திலும், பல பாதுகாப்புச் சாவடிகளிலும் மற்றும் பிற முக்கிய இடங்களிலும் நிலைநிறுத்தப்பட்டு ரோந்து மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு பூங்கா உள்கட்டமைப்பயும் சிறப்பாக வைத்திருக்கின்றனர்.