பறவைகள்

அறிமுகம்

பல்வேறு அளவுகளில் மற்றும் வண்ணங்களிலான பறவை இனங்கள் பூங்காவில் காணப்படுகின்றன. உங்கள் வசமிருக்கும் தொலைநோக்கிகள் இப்பறவை இனங்களை அவற்றின் இயல்பான நிலையில் அவை இயற்கையாக வாழுமிடங்களில் அவதானித்திட பெரிதும் உதவும் மேலும் உங்களின் வனச் சுற்றுப் பயணத்தின் போது நீங்கள் அவசியமாக பார்க்க வேண்டிய காட்சிகளை நீங்கள் தவறவிடாவில்லை என்பதனையும் இவை உறுதிசெய்திடும்.

சாம்பல் நிற இருவாச்சி, கபிலக் கொண்டை சிலம்பன்கள், செந்நிறமுதுகு மரங்கொத்தி மற்றும் இலங்கைக் காட்டுக்கோழி போன்ற பல உள்ளூர் இனங்கள் உட்பட மொத்தம் 149 வகையான பறவைகளை எளிதாக அவதானிக்கலாம்.

மரதன்மடுவ குளத்தில் இடம்பெறும் மஞ்சள் மூக்கு நாரைகளின் பாரியளவிலான இனப்பெருக்கம் பெரும்பாலான ஆண்டுகளில் காணக்கிடைக்குமொரு பொதுவான காட்சியாகும். அரியவகையிலான மலபார் தீக்காக்கைகளை (ஹார்பாக்டெஸ் ஃபாஸியாட்டஸ்) அவதானிக்க ஏதுவான தளம் வில்பத்து பூங்காவேயாகும். சமீபத்திய காலங்களில் அயனமண்டலத்தில் இவற்றின் பரவல் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது அதியுயர்ந்த பருவமழைக் காடுகளின் தரத்தைக் குறிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் முதல் அடுத்துவரும் ஆண்டு ஏப்ரல் வரையிலானகாலப்பகுதியில் ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து புலம் பெயரும் பறவைகள் குளிர்காலத்தை தவிர்க்க இலங்கையின் வெப்பமண்டல வலயங்களை நோக்கி பறக்கின்றன.

 

sri-lanka-crested-serpent-eagle

இந்த பருவத்தில், காலா ஓயாவிற்கு அருகிலிருக்கும் ஏரிகள், குளங்கள் மற்றும் மண் திட்டுக்கலில் இப் பறவைகள் கூட்டமாக கூடியிருப்பதைக் காணலாம். இவ்வாறு புலம்பெயர்ந்த பறவைகளில் ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, மணல் நிற உப்புக்கொத்தி, கருவால் மூக்கன், சின்ன பச்சைக்காலி மேலும் பல வகையான கடல் காகங்கள் மற்றும் ஆலாக்கள் ஆகியவற்றைக் காணலாம்.

வில்பத்துவின் பறவைகள்

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான பல்லுயிரியலை வழங்குகிறது.

பூங்காவில் உள்ள முதல் 5 வகையான பறவைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

வில்பத்துவின் பறவைகள்

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான பல்லுயிரியலை வழங்குகிறது.

பூங்காவில் உள்ள முதல் 5 வகையான பறவைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

Sri-Lanka-Jungle-fowl

இலங்கையின் காட்டுக் கோழி

(கல்லுஸ் லாபாயெட்டி)

இலங்கை காட்டுக்கோழி இந் நாட்டிற்கு மிகவும் பொதுவான பறவை மற்றும் நாட்டின் தேசிய பறவையாகும். ஏனைய காட்டுக்கோழிகளைப் போலவே, இந்த இனமும் பாலியல் ரீதியாக இருவகை கொண்டது; ஆண் கோழிகள் பேடுகளை விட அளவில் மிகப் பெரிதாகவும், மேலும் பொன் மஞ்சள் நிற மற்றும் பளிச்சிடும் வண்ணங்களையுடைய சிறகுகளையும், நீண்ட கொண்டைகளையும் கொண்டது, பேடுகள் மிதமான பழுப்பு நிற மற்றும் வெண்மைநிற சிறகுகளைக் கொண்டது, ஏனெனில் தரையில் கூடு கட்டும்போது தரையோடு மறைத்துக்கொள்ள எளிதாக இருக்கும்.

Malaba-Pied-Hornbill

கருப்பு வெள்ளை இருவாயன்

(ஆந்த்ராகோசெரோஸ் கொரோனாட்டஸ்)

பொதுவாக கருப்பு வெள்ளை இருவாயன்களின் இனப்பெருக்கத்திற்கும் பிரதானமாக அயனமண்டலகாடுகளுக்கும் தொடர்புண்டு. அவை உண்மையிலேயே மிகவும் வினோதமான உயிரினங்களாகும். ஆண் மற்றும் பெண் பறவை ஆகிய இரண்டும் தலையில் மிகப் பெரியதொரு எலும்பு போன்ற அமைப்பினைக் கொண்டிருக்கும். கேஸ்க் (casque) என அழைக்கப்படும் மிகவும் இலேசான மற்றும் உட்புறம் குழிவான அமைப்பைக்கொண்டிருக்கும் அப்பகுதி ஏனைய பறவைகளின் அழைப்புகளுக்கு அவை வாழும் அடர்த்தியான காட்டில் இலகுவாக எதிரொலி எழுப்ப உதவிடும், இல்லையெனில் அமைதியான பூங்காவை அவை ஆர்ப்பாட்டமான இடமாக மாற்றிவிடும்.

ஏனைய இருவாச்சி வகைகளை போலவே, இவையும் மாறுபட்ட இனப்பெருக்க முறையை கொண்டுள்ளன. இனப்பெருக்கத்தின் போது ஆண் மரத் துளை ஒன்றினுள் அது அமைத்த கூட்டினுள் பெண்ணை அடைகாக்க வைத்து அத்துளையையின் வாயில் சுவர்போன்றொரு தடுப்பை அமைக்கும். மேலும் அடைகாக்கும் காலத்தில் பெண் பறவையானது உணவுக்காக ஆண்பறவையையே முழுமையாக சார்ந்த்திருக்கும். மாலை நேரங்களில் இவற்றை தரையில் மணல் குளியலில் ஈடுபடும் போது அவதானிக்கலாம்.

lesser adjutant

சிறுத்த பெருநாரை

(லெப்டோப்டிலோஸ் ஜவானிக்கஸ்)

சிறுத்த பெருநாரைகள் என்பது இலங்கையின் அயனமண்டல தாழ்நிலப்பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்கம் செய்யும் அரிய பறவை இனமாகும். சிவப்பு நிற வெற்று தலை மற்றும் நீண்ட மஞ்சள் கழுத்து இப் பறவையை எளிதாக அடையாளம் காண உதவிடும்.

இயற்கையாக மிகவும் அமைதியானவை இவை. சிறுத்த பெருநாரைகள் பெரும்பாலும் ஏரிகள், குளங்கள் மற்றும் அவற்றை அண்டிய பிரதேசங்களில் மீன்கள், தவளைகள் மற்றும் பெரிய முதுகெலும்பிலிகள் போன்றவற்றை இரை தேடுவதை அவதானிக்கலாம். இதுவே இலங்கைத் தீவில் காணப்படும் மிகப்பெரிய நீர்ப்பறவை இனமாகும். மற்றும் காடழிப்பு காரணமாக தேசிய மற்றும் உலகளவில் அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது. எனவே, பூங்காவில் இதன் அழகைக் காண்பது உண்மையில் ஒரு விசேட சலுகையாக இருக்கும்.

Crested-Serpent-Eagle

கொண்டை பாம்புண்ணிக் கழுகு

(ஸ்பைலோர்னிஸ் சீலா ஸ்பிலோகாஸ்டர்)

கொண்டை பாம்புண்ணிக் கழுகு என்பது பூங்காவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழும் வேட்டையாடும் ஊன்உண்ணிப் பறவையாகும்.இப் பறவை மிகவும் தனித்துவமான பறக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் பெரும்பாலும் சுற்றுலாவுக்கு வருகை தரும் வாகனத்துடன் சிறிது தூரம் பறந்து, பார்வையாளருக்கு அதைப் பாராட்டுவதற்காக வாய்ப்பை வழங்குகிறது.

அதன் பெயரிற்கு ஏற்ப இவை பிரதான உணவாக பாம்புகளை உட்கொள்கின்றன, மேலும் தவளைகளையும் மற்றைய ஊர்வனவற்றையும் இவை உட்கொள்ளும். இவ்வினத்தை ஆசியாவில் உள்ள அயனமண்டல நாடுகள் முழுவதும் பரவலாக காணலாம்.

Woolly-necked Stork

கம்பளி அல்லது வெண் கழுத்து நாரை

(சிக்கோனியா எபிஸ்கோபஸ்)

வெண் கழுத்து நாரை பூங்காவில் காணப்படும் உலகளவில் அச்சுறுத்தப்பட்ட மற்றுமொரு பறவை இனமாகும். இவை தனித்தனியாக அல்லது மஞ்சள் மூக்கு நாரைகள் மற்றும் கொக்கு போன்ற பிற நீர் பறவைகளுடன் இணைந்து காணப்படும்.

இதன் கருத்த பளபளப்பான உடலும் மற்றும் தலையும், அதே போல் நீண்ட வெள்ளை கழுத்தும் ஈரநிலங்களில் இவற்றை தனிச்சிறப்புடன் காட்டிடும். இந்த இனம் பெரும்பாலான ஆசிய நாடுகளில் காணப்படுகிறது மற்றும் இலங்கையில் அயனமண்டலத்துக்கு மட்டுமே உட்பட்டது. வெண் கழுத்து நாரைகள் தவளைகள், பல்லிகள் மற்றும் பெரிய பூச்சிகள் ஆகியவற்றை இரையாகத் தேடி மெதுவாக நீர்நிலைகளில் நடந்திடும்.

வேடிக்கையான தகவல்கள்

birds in wilpattu
Shopping Basket
WNP

FREE
VIEW