வில்பத்துவில் வாழும் பாலூட்டிகளே, பூங்காவிற்கு வருகைதரும் சுற்றுலாப் பிரயாணிகளை மற்றும் பார்வையாளர்களை மிகவும் வசீகரிக்கும் விடயமாகும், அவற்றில் முக்கியமாக நான்கு இனங்கள் (செங்குரங்கு, ஊதா நிற இலை வடிவ முகம் கொண்ட குரங்கு, இலங்கை பொன்னிற மரநாய் மற்றும் சருகு மான்கள்) அடங்கும், அந் நான்கு இனங்களும் இலங்கைக்கு உரித்தானவையாகும். மேலும் புள்ளி மான், செம் மான் எனப்படும் கேளையாடுகள், கடமான், காட்டு எருமைகள், குள்ளநரிகள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள் மற்றும் திறந்த புல்வெளிகளில் வேகமாக நகரும் குழிமுயல்கள் போன்ற பல பாலூட்டிகளை பகல் வேளைகளில் நீங்கள் அவதானிக்கலாம்.
மெதுவாக நகரும் சாம்பல் நிறத் தேவாங்குகள் போன்ற இரவு இனங்கள் அமைதியாக தங்கள் இரையைத் தேடும் அதே வேளையில் சிறிய மாமிசபட்சிகளான பாலூட்டிகள் விரைவானவை மற்றும் அவற்றை கண்டுபிடிப்பதும் மிகவும் கடினமாகும். காட்டுப் பூனைகள், சாம்பல் புள்ளி பூனைகள், மீன்பிடிப் பூனை, புனுகுப் பூனைகள் மற்றும் கீரிப் பூனை இனங்கள் என்பனவற்றை அதிகாலை மற்றும் அந்தி மாலை வேளைகளில் அதிகமாக அவதானிக்கலாம், ஆயினும் இவற்றை அவதானிக்க கூர்மையான அவதானிப்பு புலன் வேண்டும்.
பொம்பரிப்புவில் உள்ள ஏரி மற்றும் ஈர நிலங்களுக்கு அருகில் உள்ள இடங்கள் வண்ண வௌவால்களின் (கெரிவவ்லா பிக்டா) வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது மற்றும் பூங்கா வளாகத்தின் கைவிடப்பட்ட கட்டிடங்களில் பிற பூச்சியுண்ணி வகை வௌவால் இனங்கள் வாழ்கின்றன.