ஊர்வனக்கள்

அறிமுகம்

ஈரநில வாழ்விடங்களுடன் ஒப்பிடும்போது அயனமண்டலப் பகுதிகளில் உள்ள பூங்காவில், நிலநீர் வாழ்வனவின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன, அண்ணளவாக மொத்தம் 17 நிலநீர் வாழ் இனங்கள் வில்பத்து பூங்காவில் காணப்படுகின்றன.

இவை இலங்கையின் மொத்த நிலநீர் வாழ் உயிரின பன்முகத்தன்மையில் சுமார் 15% ஆகும். அதுகோரல குள்ளத் தேரை, பூ மரத் தவளை மற்றும் இலங்கை மரத் தவளை ஆகிய மூன்று இனங்களும் உள்நாட்டில் காணப்படும் இனங்களாகும்.

நிலநீர் வாழ் உயிரினங்களுக்கு மாறாக, பல ஊர்வன இனங்கள் அயனமண்டல பகுதிகளில் காணப்படுகின்றன. இப் பூங்காவில் ஆமைகள், முதலைகள் மற்றும் பல்லிகள் உட்பட 57 வகையான ஊர்வனக்கள் உள்ளன. 

mugger-crocodile-in-wilpattu

இலங்கை பச்சோந்தி (சாமலியோ ஜெய்லானிக்கஸ்) ஏரிகளுக்கு அருகிலுள்ள முட்புதர்களை வாழ்விடமாகக் கொண்ட அச்சுறுத்தப்பட்ட மற்றுமொரு அரிதான இனமாகும். இலங்கையின் மிகப்பெரிய ஊர்வனவான சதுப்புநில முதலைகள் (க்ரோகோடைலஸ் பலஸ்ட்ரிஸ்) மற்றும் இந்திய மலைப் பாம்பு (பைதான் மோலூரஸ்) ஆகியவை பூங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வில்பத்துவில் வாழும் ஊர்வன

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான பல்லுயிரியலை உள்ளடக்கியது.

பூங்காவில் உள்ள முதல் 5 வகை ஊர்வனவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

வில்பத்துவில் வாழும் ஊர்வன

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான பல்லுயிரியலை உள்ளடக்கியது.

பூங்காவில் உள்ள முதல் 5 வகை ஊர்வனவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

Sharkhead Snakeskink (Nessia hickanala)

பாம்புராணி / பாம்பு அரணை

(நெசியா ஹிகனாலா)

வில்பத்து தேசிய பூங்கா உள்ளிட்ட வடமேற்கு கடற்கரையோரங்களில் மட்டுமே இந்த அரிய வகை அரணையினங்கள் காணப்படுகின்றன, இது இலங்கைக்கு உரித்தான ஊர்வனவாகும்.

இந்த இனம் மிகவும் சுறுசுறுப்பானது மற்றும் உடலில் அடர் பழுப்பு நிற செதில்களைக் கொண்டுள்ளது. இவை பிரதானமாக மண்ணில் புதைந்து வாழ்பவை, இவை வறண்ட மண்ணிலும் புதைந்து கொள்ளக்கூடிய தன்மை உடையவை.

© Mendis Wickramasinghe

இருதலை மணியன்
அல்லது
மண்ணுளிப் பாம்பு

(ரைனோபிஸ் டோர்சிமாகுலட்டஸ்)

வில்பத்து தேசிய பூங்காவின் கரையோரப் பகுதியிலும் அதைச் சுற்றியும் மட்டுமே மண்ணுளிப் பாம்பு காணப்படுகிறது. இது மண்ணில் புதைந்துகொள்ளும் தன்மையுடையது, மேலும் இதன் வால் முடிவில் ஒரு பெரிய கொம்புறைக் கவசம் காணப்படும் மற்றும் இது விஷமற்ற பாம்பினமாகும். இதன் குடும்பப் பெயர், யூரோபெல்டிடே, கிரேக்க சொற்களான யூரா ("வால்") மற்றும் பெல்டே ("கவசம்") என்பதிலிருந்து பெறப்பட்டது.

Chameleon-in-wnp

இலங்கை பச்சோந்தி

(சாமலியோ ஜெய்லானிக்கஸ்)

இலங்கைப் பச்சோந்தி என்பது இலங்கைக்கு உரித்தான மிகவும் அரிதான இனமாகும், ஆனால் வில்பத்து தேசிய பூங்கா இந்த இனங்கள் பல்கிப்பெருகிட சிறந்தவொரு வாழ்விடத்தை வழங்குகிறது, எனவே பொதுவாக முட்புதர் காடுகளில் இவற்றைக் காணலாம்.

இந்த அற்புதமான பச்சோந்திகளால் 360 பாகைக்கு தங்களது பார்வையை சுழலவிட்டு தங்களின் சூழலில் கவனம் செலுத்தலாம். இவை மெதுவாகவே நகரும், ஆனால் சிறிய முதுகெலும்பிலிகளை இரைக்காக வேட்டையாடும் போது மின்னல் வேகத்தில் மனிதன் கண்ணைச் சிமிட்ட எடுக்கும் நேரத்தை விட வேகமாக நீண்ட நாக்குகளை நீட்டி இரையை பிடிக்க்கும்.

Haly's Treeskink (Dasia halianus)

ஹாலி மர அரணை

(தாசியா ஹாலியானஸ்)

இலங்கைக்குச் சொந்தமான மிக அழகான மர அரணையாகும். இந்த இனம் இலங்கையில் மிகவும் அரிதானது என்ற போதிலும், இது பொதுவாக வில்பத்து தேசிய பூங்காவில் காணப்படுகிறது மற்றும் இலங்கையின் ஒரே மர அரணை இனமாகும்.

இலங்கை மணல் மலைப்பாம்பு

(கோங்கிலோபிஸ் கோனிகா)

மணல் மலைப்பாம்பு முக்கியமாக வறண்ட, அரை வறண்ட மற்றும் அயனமண்டலங்களில் காணப்படும். இயற்கையாக மெதுவாக நகரும் மற்றும் ஏனைய மலைப்பாம்பு இனங்களை விட அளவில் மிகவும் சிரியதுமான மணல் மலைப்பாம்பு பொதுவாக வில்பத்து பூங்காவில் காணப்பட்டாலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் இவற்றைக் காண்பது மிகவும் அரிதாகும். மணல் மலைப்பாம்புகள் விஷம் அற்றவையாகும், ஆகவே இவற்றின் இரை சுற்றி வலைத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறல் மூலம் கொல்லப்படுகின்றன.

வேடிக்கையான தகவல்கள்

mugger croc large
Shopping Basket
WNP

FREE
VIEW