வில்பத்துவில் வாழும் பட்டாம்பூச்சிகள் வண்ணமயமான மற்றும் கவர்ச்சியானவையாகும்; இலங்கையில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய பட்டாம்பூச்சி வகைகளுக்கு இப் பூங்கா புகழ்பெற்றதாகும். வில்பத்துவின் வடக்குப் பகுதியில் பட்டாம்பூச்சிகள் தங்கள் இடம்பெயர்வு பாதையைத் தொடங்குகின்றன, மேலும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஈரமான மணல் திட்டுகளில் “சேற்றுழவலில்” ஈடுபடும் பட்டாம்பூச்சிகளின் பெரிய கூட்டங்களைக் காணலாம், சேற்றுழவலில் போது இப் பூச்சிகள் தரையில் இருந்து தமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உப்புகளை பிரித்தெடுக்கின்றன.
இலங்கைத் தீவில் பட்டாம்பூச்சி இனங்களின் பரவல்களுக்கு மற்றும் இனப்பெருக்கத்திற்கு காலநிலை மாற்றம், நிலப்பரப்பு மற்றும் தாவர வகைகள் என்பன முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. இலங்கையில் பெரும்பாலான பட்டாம்பூச்சி இனங்கள் இலங்கை முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன.