புவியியல்

அறிமுகம்

வில்பத்து பகுதி முக்கியமாக வண்டல் பாறைகள் மற்றும் மண்ணினால் அமையப்பெற்றுள்ளது. அவை எல்லா இடங்களிலும் மேற்பரப்பில் தெரிவதில்லை என்றாலும், இப்பகுதியின் புவியியல் முக்கியத்துவத்தை விளக்க சரியான தளமான குதிரைமலை அருகிலுள்ள குறுக்குவெட்டில் இதனை அவதானிக்கலாம்.

பூங்காவின் உட்புறத்தை நோக்கி, பாறைகள் யாழ்ப்பாண சுண்ணாம்பு முதல் விஜயன் தொடர் வரை மாறுபடுகின்றன, இது படிக சுண்ணாம்பு மற்றும் பளிங்கு படிவப்பாறை உள்ளிட்ட பெரிய படிகப் பாறைகளின் சிக்கலான கூட்டமைப்பாகும். பிரதான நதி அமைப்புகள் மற்றும் அவற்றின் துணை நதிகளின் அமைப்பில் பிற மண் வகைகளில் களிமண்ணும் அடங்கும். சில சுவாரஸ்யமான புவியியல் வடிவங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Inland Wetland Ecosystems

வில்பத்துவின் புவியியல்

வில்பத்துவின் புவியியல்

செம் மண் (சிவப்பு பூமி)

பூங்காவின் உட்புறத்தை நோக்கி, பாறைகள் யாழ்ப்பாண சுண்ணாம்பு முதல் விஜயன் தொடர் வரை மாறுபடுகின்றன, இது படிக சுண்ணாம்பு மற்றும் பளிங்கு படிவப்பாறை உள்ளிட்ட பெரிய படிகப் பாறைகளின் சிக்கலான கூட்டமைப்பாகும். பிரதான நதி அமைப்புகள் மற்றும் அவற்றின் துணை நதிகளின் அமைப்பில் பிற மண் வகைகளில் களிமண்ணும் அடங்கும். சில சுவாரஸ்யமான புவியியல் வடிவங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

மணற்கல்

மணற்கல் என்பது சிவப்பு பூமிக்கு அடியில் உள்ள ஒரு வண்டல் பாறை வகையாகும், ஒழுங்கற்ற அல்லது கூம்பு வடிவ நிகழ்வுகளாக குதிரைமலையில் உள்ள சிவப்பு பூமிக்கு சற்று கீழே அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். இது சுண்ணாம்பு களிமண்ணால் ஒன்றாக கலந்து செய்யப்பட்ட வட்டமான மணல் துகள்களின் உருவாக்கம் ஆகும்.

சுண்ணாம்பு

சுண்ணாம்பு என்பது மணற்கற்களுக்கு அடியில் உள்ள குதிரைமலையில் காணப்படும் ஒரு வண்டல் பாறையாகும். இது முக்கியமாக கல்சியம் கார்பனேட் மற்றும் கடல் முதுகெலும்பிலிகளையும் மற்றும் இருமூடுளே புதைபடிவங்களையும் கொண்டுள்ளது.

இந்த சுண்ணாம்பு கல் மியோசீன் யுகத்தில் (சுமார் 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) உருவான கடலின் உருவாக்கம் என்று கருதப்படுகிறது.

Inland Wetland Ecosystems

ஏரிகள் / வில்லு

வில்பத்து என்ற பெயர் இப்பகுதியில் ஏராளமான “வில்லு” அமைப்புகள் இருந்ததினால் பெறப்பட்டது. வில்பத்து பூங்கா முழுவதும் பல வில்லுக்கள் அல்லது ஏரிகள் பரந்துகிடக்கின்றன, அவை ஓரளவு தண்ணீரினால் நிரம்பியுள்ளன.

இவை "புதை குழிகள்" என்றும் அறியப்படுகின்றன, அவை துவாரங்களின் அடியில் சுண்ணாம்புக் கற்கள் சரிந்ததினால் உருவானவையாகும்.

ப்ரீகாம்ப்ரியன் பாறைப் படுக்கை

வில்பத்துவின் பெரும்பகுதி வண்டல்களால் மூடப்பட்டிருந்தாலும், ப்ரீகாம்ப்ரியன் யுகத்தின் அடித்தள பாறைகள் (550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது) மிகக் குறைந்த இடங்களில் காணப்படுகின்றன. இப் பழமை வாய்ந்த வண்டல் பாறைகளை கொக்கமோட்டுவிலுள்ள மோதரகம் ஆற்று நதிப் படுக்கையின் அருகில் காணப்படும்.

வேடிக்கையான தகவல்கள்

Shopping Basket
WNP

FREE
VIEW