சுற்றுச்சூழல் அமைப்புகள்

அறிமுகம்

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான வாழ்விடங்களையும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புக்களையும் கொண்டுள்ளது. வன சுற்றுச்சூழல் அமைப்புகள், ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் கரையோர சுற்றுச்சூழல் அமைப்புகள் என்பன பூங்காவில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புக்கள் ஆகும், ஒவ்வொன்றும் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. வில்பத்துவின் இச் சூழல் அமைப்பு வளமான பல்லுயிரினங்கள் வாழ சரியான வாழ்விடங்களை வழங்குகிறது.

வன சுற்றுச்சூழல் அமைப்பே பூங்காவில் ஆதிக்கம் செலுத்தும் சுற்றுச்சூழல் அமைப்பாகும், இது “உலர் பசுமைக் காடுகள்” என்று குறிப்பிடப்படுகிறது, இதில் அடர்த்தியான காடுகள் மற்றும் முட்கள் நிறைந்த புதர் செடி காடுகள் காணப்படுகின்றன, மீதமுள்ளவை திறந்த சமவெளிகளாகும். இயற்கையாக அமைந்த மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர் நிலைகள் மற்றும் குளங்களுக்கு ஒத்த இரு வகையான வாழ்விடங்களும் பூங்காவில் காணப்படுகின்றன, மேலும் இவை சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்டுமொத்த சமநிலையையும் பராமரிக்கின்றன.

வில்பத்துவின் வன சுற்றுச்சூழல் அமைப்புகள்

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான இயற்கை காட்சிகளை கொண்டுள்ளது.

பூங்காவில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும்.

வில்பத்துவின் வன சுற்றுச்சூழல் அமைப்புகள்

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான இயற்கை காட்சிகளை கொண்டுள்ளது.

பூங்காவில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகள் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும்.

forest ecosystems

வன சுற்றுச்சூழல் அமைப்புகள்

அயனமண்டல உலர் பசுமைக் காடுகள் (TDEF) பூங்காவில் காணப்படும் பொதுவான உலர் மண்டல உச்சகட்ட காடுகள் மேலும் அவை பெறுமதியான உள்நாட்டு மரங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகின்றன.

இனங்களின் கலப்பு மற்றும் தாவரங்களின் உயரத்தின் அடிப்படையில், வில்பத்துவில் TDEF இன் பல துணை வகைகள் உருவாகின்றன. 20 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட காடுகள், நடுத்தர உயர காடுகள், குள்ளக் காடுகள் மற்றும் பாறை வெளிக் காடுகள் ஆகியவை இதில் அடங்கும்.

அயனமண்டல முற் காடுகளில் (ஸ்க்ரப்லாண்ட்ஸ்) தடிமமான முற்கள் அல்லது தண்டுகள் மற்றும் மரத்தாலான தாவரங்கள் 4-6 மீட்டர் உயரம் வரை வளர்கின்றன, அதே நேரத்தில், ஆறு மற்றும் நீரோடைகளுக்கிடையில் அமைந்த நதிக்கரை காடுகள் இறுதியாக சதுப்புநில வாழ்விடங்களுக்கு இட்டுச் செல்கின்றன (கரையோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பார்க்கவும்).

கலா ஓயா மற்றும் மோதரகம் ஆற்றுடன் தொடர்புடைய நன்கு வளர்ந்த நதிக்கரை காடுகள் பறவைகள், வெளவால்கள், ஊர்வனக்கள், நிலநீர் வாழ் உயிரினங்கள் போன்றவற்றுக்கு ஏற்ற வாழ்விடங்களை வழங்குகின்றது.

இறுதியாக, உலர் பத்தனை புல்வெளிகள் பொதுவாக வில்பத்து தேசிய பூங்காவின் மேற்கு பகுதியை நோக்கி பரவிக்கிடக்கிறது, குறிப்பாக முட்புதர் காடுகளுடன் இவை இணைந்து காணப்படுகின்றன. மக்கள் வரலாற்று காலப்பகுதியில் வாழ்ந்த இடங்களில் இவை அதிகளவில் திட்டுக்களாக அமைந்துள்ளன.

Inland Wetland Ecosystems

உள்நாட்டு ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகள்

உள்நாட்டு ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகள், அனைத்து வனவிலங்குகளுக்கும் தண்ணீரை வழங்குகின்றன, இவை வில்பத்துவில் ஏற்படும் நீண்ட கால வரட்சியின் போது மிக முக்கியமானதாகும். வெள்ளபெருக்கு சமவெளிகள், சதுப்பு நிலங்கள், மனிதனால் மற்றும் இயற்கையால் உருவாக்கப்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவை பூங்காவில் உள்ள பல உயிரினங்களுக்கு விலைமதிப்பற்ற நீரை வழங்குகின்றன. குளங்கள் வில்பத்துவின் காணப்படும் ஓடை மற்றும் நதி வலையமைப்புக்களுடன் இணைந்து காணப்படுகின்றன.

ஏரிகளைப் போலல்லாமல், இக் குளங்களிலிருந்து நீர் வெளியேறும் வழிகளை தெளிவாக பார்க்க முடியும், மேலும் இக்குளங்களை சுற்றி வரட்சி ஏற்படும் காலத்திலும் மெல்லிய தாவரப் படுக்கைகள் வளர்ந்திருக்கும்.இந் நீரின் தற்காலிக மற்றும் இடஞ்சார்ந்த கிடைக்கும் தன்மை பொறுத்து இவ் ஈரநிலங்களில் பல துணை வாழ்விடங்களை அவதானிக்க முடியும். மகா வாவி, மரடன்மடுவ, பெர்சி பெடி வாவி மற்றும் அந்தரகோலா வாவி போன்றவை பூங்காவில் காணப்படும் சில குளங்களாகும்.

கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகள்

வில்பத்து தேசிய பூங்காவில் 34 கி.மீ நீளமுள்ள கடற்கரை பகுதி உள்ளது, இது பூங்காவில் குறிப்பிடத்தக்க அனுபவத்தை உருவாக்குகிறது. கடலோரக் காடுகளை பிரதானமாக சதுப்புநிலத் தாவரங்கள் உருவாக்குகின்றன, முக்கியமாக இது பூங்காவின் தென்மேற்கு எல்லையில் உள்ள கலா ஓயா கரையோரத்தில் மட்டுமே காணப்படுகிறது. இந்த சதுப்புநில காடுகள் இலங்கையின் மிகப்பெரிய மற்றும்  சிறந்த சதுப்புநில காடுகளில் ஒன்றாகும், இது ஆற்று முகத்திலிந்து 2 கி.மீ. வரை உள்நோக்கி நீண்டு வளர்ந்திருக்கும்.

இங்கு கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் உயரத்திலிருக்கும் கடலோரக் குன்றுகள், செம்மண் கடற்கரைகள் மற்றும் கடலோரக் குன்றுகளுடன் தொடரும் மணல் திட்டுகள் என்பனவற்றைக் காணலாம். கடற்கரை தாவரங்கள் பூங்காவின் மேற்கு பகுதியில் கடலை நோக்கிய சாய்வான நிலப்பகுதியில் காணப்படுகின்றன. கடற்கரை தாவரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறு மணல் திட்டுகளின் இயற்பியல் மற்றும் தாவரவியல் கலவை கரையின் பரப்பளவு, அதன் செங்குத்தான அமைப்பு மற்றும் நிலத்தின் நிலைத்த தன்மையின் அளவைப் பொறுத்து காணப்படும்.

கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதி மீன்வளம் அதிகமாக உற்பத்தியாகும் பகுதியாகும், அதே நேரத்தில் உலகளவில் அழிந்துவரும் ஆபத்துக்குள்ளான அவில்லியாக்கள் (டுகோங்கை) உண்பதற்கான கடல் புல் படுக்கைகளையும் இது கொண்டுள்ளது.

வேடிக்கையான தகவல்கள்:

Shopping Basket
WNP

FREE
VIEW