sloth bear
leopard
deer
a herd of deers
[simple-weather latitude="8.449729" longitude="80.013176" show_current="yes" units="metric" style="large-icons" date="MMM DD" days="1"]

அறிமுகம் - வில்பத்து தேசிய பூங்கா

வில்பத்து தேசிய பூங்காவின் (WNP) பசுமை கொழிக்கும் வனப்பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். 131,000 ஹெக்டேயர் பரப்பளவில் அமைந்துள்ள இவ் வனப்பகுதி இலங்கையின் மிகப்பெரிய மற்றும் பழமையான பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். 1938-1973 க்கு இடையில் விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட ஐந்து தொகுதிகளைக் கொண்டுள்ள இப் பூங்காவானது,  வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 

WNP புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்டங்கள் வரை பரவியுள்ளது, மேலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லையாகவும் உள்ளது. நாட்டின் இப்பகுதியானது யானைகளின் வாழ்விடங்களுள் மிக முக்கியமான ஒன்றாகும். மேலும் இங்கு தேன் கரடி (Sloth Bear) மற்றும் அரியவகை இலங்கைச் சிறுத்தை போன்ற வனவிலங்குகளையும் அவதானிக்கலாம். 

இப் பூங்காவானது  இலங்கையில் உள்ள ஏனைய தேசிய பூங்காக்களை விடவும் அடர்த்தியான வனப்பகுதியைக் கொண்டுள்ளது.  WNP இன் நிலப்பரப்பானது அயன மண்டல காடுகள், முற் புதர்கள், பரந்த திறந்தவெளி சமவெளிகள், மணல் திட்டுக்கள், ஏரிகள் மற்றும் தனித்துவமிக்க ஈரநிலங்களை உள்ளடக்கியது. போர்த்துக்கல் விரிகுடா மற்றும் டச்சு விரிகுடாவின் குறுகிய வெற்று கடற்கரைகளில் ஓங்கி உயரும் சிவப்பு பாறைகள் இந் நிலப்பரப்பின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

WNP பண்டைய வரலாற்று நகரமான அனுராதபுரத்திற்கு அருகாமையில் அமைந்த்துள்ளது. மற்றும் வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களுக்குரிய பழங்கால இடிபாடுகள் மற்றும் தொல்பொருட்களை கொண்டுள்ளது.

ramsar convention on wetlands

வில்பத்து தேசிய பூங்காவின் மொத்த நிலப்பரப்பு, மேற்கு கடற்கரை வழியே கடல் ஓரங்களில் 10 கி.மீ. வரையிலான பகுதி, கலா ஓயா முகத்துவாரம், மோதரகம் ஆற்று முகத்துவாரம் மற்றும் மஹாவிலச்சிய நன்னீர் நீர்த்தேக்கம் ஆகியன சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக 2013 ஆம் ஆண்டில் ராம்சார் மாநாட்டின் கீழ் அறிவிக்கப்பட்டது.

ராம்சார் நிலப்பரப்பின் மொத்த பரப்பளவு 165,800 ஹெக்டேர் ஆகும், இதில் WNP முக்கிய அங்கம் வகிக்கின்றது.

leopard on the branch

நடத்தை விதிமுறை

வில்பத்து தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கான நடத்தை விதிமுறைகள்

வருங்கால சந்ததியினருக்காக அதன் வளமான பல்லுயிரியலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இப் பூங்கா, வனவிலங்கு ஆர்வலர்களுக்கு இயற்கையை அதன் தன்னியல்பான நிலையில் மிகச் சிறப்பாக அனுபவிக்க சகல வசதிகளையும்  வழங்குகிறது. 2018 ஆம் ஆண்டில் வில்பத்து தேசிய பூங்காவின் கண்கவர் இயற்கைக் காட்சிகளையும் அங்கு வசிக்கும் அரிதான வனவிலங்குகளையும் காண, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வனவிலங்கு ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும் வருகைதந்திருந்தனர். பூங்காவிற்கு வருகைதரும் பார்வையாளர்கள் அங்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் அறியப்படுத்டுவற்காக ஒரு நடத்தை விதிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. 

  • பூங்காவில் வன விலங்குகளுக்கு உணவளிப்பது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது 
  • இப் பூங்காவானது  வனவிலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு சட்டத்தால் பாதுகாக்கப்படுவதினால் பூங்காவிலிருந்து எந்தவொரு பொருளையும் ஞாபகார்த்தப் பொருளாகவோ அல்லது நினைவுப் பரிசாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. இதில் வனவிலங்குகள், பூச்சிகள், தாவரங்கள், பூக்கள், முட்டைகள், எலும்புகள், மண்டை ஓடுகள், பாறைகள், மற்றும் எச்சங்கள் போன்றவை அடங்கும்.
  • விலங்குகளை துன்புறுத்துவதைத் தவிர்ப்பதற்காக வனவிலங்குகளை  பார்வையிடும்போது கடுமையான மௌனத்தை கண்டிப்பாக கடைபிடியுங்கள்.
  • வனவிலங்குகளை புகைப்படம் பிடிக்கும்போது ஃபிளாஷ் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • உரத்த இசை அல்லது கைதொலைபேசிகளிலிருந்து வரும் அழைப்பு ஒலிகளை தவிர்க்கவும்
  • வனவிலங்குகளைப் பார்வையிடும்போது கைதட்டல், கூச்சலிடுதல் அல்லது விசில் அடித்தலை தவிர்க்கவும்
  • சுற்றுப்பயணத்தின் போது உங்கள் வாகனத்தை விட்டு வெளியேறாதீர்கள், ஜன்னலுக்கு வெளியே சாய்ந்து கொள்ளவோ அல்லது கூரையில் ஏறவோ  வேண்டாம்.
  • உங்கள் வாகனத்தை விட்டு வெளியேறுவதற்கு உங்களுக்கு  கும்புக்வில மற்றும் குதிரைமலை போன்ற நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் 
  • உங்கள் வாகனத்திலிருந்து குப்பைகளை வெளியே வீசுவது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து எல்லா குப்பைகளையும் உங்களுடன் எடுத்துச் சென்று பொறுப்புடன் அப்புறப்படுத்துங்கள்.
  • பூங்காவிற்குள் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது
  • அங்கீகரிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுகின்றன, மேலும் அவை அதிகபட்ச வேக வரம்பாக மணிக்கு  25 கி. மீ வேகத்தை பராமரிக்க வேண்டும்.
  • மெதுவாக வாகனத்தை செலுத்துவதன் மூலம் பறவைகள், ஊர்வன, நீர்வீழ்ச்சிகள் மற்றும் பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களை பார்வையிட முடியும்.
  • உங்களின் வாகன ஓட்டுநர் ஏனைய வாகனங்களைத் தடுக்கவில்லை அல்லது விலங்குகளின் இயக்கம் மற்றும் நடத்தையில் தலையிடவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

முதல் முக்கிய 5 உயிரினங்களின் அறிமுகம்

உலகளவில் அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ள ஆனால் வில்பத்து தேசிய பூங்காவில் எளிதில் காணக்கூடிய 5 முதல் முக்கிய வனவிலங்கு இனங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

முதல் முக்கிய 5 உயிரினங்களின் அறிமுகம்

உலகளவில் அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ள ஆனால் வில்பத்து தேசிய பூங்காவில் எளிதில்

காணக்கூடிய 5 முதல் முக்கிய வனவிலங்கு இனங்களைப் 

பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

sri-lankan-elephant at wilpattu

இலங்கை யானைகள்

(எலிபாஸ் மாக்சிமஸ் மாக்சிமஸ்)

இலங்கை யானைகள் ஆசிய யானைகளில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று கிளையினங்களில் ஒன்றாகும், மேலும் இலங்கைக்கு உரித்தானதாகும். மிகப் பெரிய நில வாழ் விலங்கு என்பதால், யானைகளை பூங்காவின் எல்லைகளிலும், மேற்கு கடற்கரைப் பகுதியிலும், குறிப்பாக பொம்பரிப்பு மற்றும் மைலாவில்லு ஆகிய இடங்களில் இவற்றின் நடமாற்றத்தை எளிதாக அவதானிக்கலாம். ஏனைய பாலூட்டிகளைப் போலல்லாமல், மத்திய ஈரநிலங்கள் மற்றும் குளங்களின் அருகில் அரிதாகவே இவற்றை கூட்டமாக காணமுடியும்.

Sri Lankan leopard, Panthera pardus kotiya

இலங்கைச் சிறுத்தை

(பாந்தேரா பர்துஸ் கொட்டியா)

வில்பத்து தேசிய பூங்காவானது கம்பீரமிக்க இலங்கைச் சிறுத்தைகளை அவதானிக்க கூடிய பிரபலமானதொரு இடமாகும். மேலும் இச் சிறுத்தை இனம் இலங்கைக்கே உரித்தான துணை இனமாகும். இலங்கைத் தீவின் மிகப்பெரிய பூனை இனமாகவும், மற்றும் வேட்டையாடும் விலங்காகவும் இருப்பதனால், விடியல் மற்றும் அந்தி வேளைகளில் அச்சமின்றி ஏரிகள் மற்றும் குளக்கரைகளில் உலாவுவதைக் காணலாம்.

sri-lankan-wild-sloth-bear

இலங்கைத் தேன் கரடி

(மெலூர்சஸ் உர்சினஸ் இன்னோர்னடஸ்)

இந்த துணை இனம் இந்திய தேன் கரடிகளை விட அளவில் மிகவும் சிறியவை மற்றும் பூங்கா முழுவதும் இவற்றின் நடமாட்டத்தை அவதானிக்கலாம். குறிப்பாக மரடன்மடுவ பகுதியில் அவற்றின் நடமாட்டம் செறிவாக காணப்படும். இந்த கறுப்பு உரோம கரடிகள் பிரதானமாக கரையான்கள் மற்றும் சிறுபழங்களை உணவாகக்கொள்ளும் அனைத்து உண்ணிகளாகும்.

இதனால் சுற்றுச்சூழல் உறவின் சிறந்த எடுத்துக்காட்டாக பூங்காவில் அதிகமாக வளரும் மர இனங்களையும் (மணில்காரா ஹெக்ஸாண்ட்ரா மற்றும் வைடெக்ஸ் செபிரியா), இலங்கையில் வாழும் பெரிய பாலூட்டி இனங்களில் ஒன்றான இக் கரடிகளையும் குறிப்பிடலாம். இவ்விரு மரங்களின் பழங்களையும் கரடிகள் மிகவும் விரும்புகின்றன.

சிறுத்த பெருநாரை

(லெப்டோப்டிலோஸ் ஜவானிக்கஸ்)

இது இலங்கையின் அயனமண்டல தாழ்நிலப்பகுதிகளில் மட்டும் இனப்பெருக்கம் செய்யும் பெருநாரை வகையைச் சேர்ந்த சிறு நாரைகள் ஆகும். இயற்கையாக மிகவும் அமைதியானவை. சிறுத்த பெருநாரை பெரும்பாலும் ஏரிகளில் மற்றும் குளங்களில் மற்றும் அவற்றை அண்டிய பிரதேசங்களில் மீன்கள், தவளைகள் மற்றும் பெரிய முதுகெலும்பிலிகள்  போன்றவற்றை இரைக்காக தேடுவதை அவதானிக்கலாம். இது இலங்கையில் காணப்படும் மிகப் பெரிய பறவை இனங்களில் ஒன்றாகும் மற்றும் அதன் வெற்றுத்தலை, நீண்ட அலகு மற்றும் மஞ்சள் நிறக்கழுத்து என்பன இப் பறவைக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கின்றன.

mugger-crocodile

சதுப்புநில முதலை

(முதலை பலஸ்ட்ரிஸ்)

இலங்கையில் காணப்படும் இரண்டு முதலை இனங்களில், Mugger அல்லது Marsh எனப்படும் சதுப்புநில முதலைகளை இப்பூங்காவில் பொதுவாக அவதானிக்கலாம். இம் முதலைகள் ஏரிக்கரைகள் மற்றும் குளக்கரைகளில் அவற்றின் வாய்களை அகலத்திறந்த வண்ணம் படுத்திருப்பதைக் காணலாம். வெப்பப் பரவல் மூலம் அவற்றின் உடல் வெப்பநிலையை சமப்படுத்துவதே இக் குளிர்காய்தலின் நுட்பமாகும்.

பூங்கா பற்றிய சில தகவல்கள்

வரலாறு மற்றும் சுவாரசியமிக்க இடங்கள்

குளங்கள் உட்பட பூங்காவைச் சுற்றி காணப்படும் தொல்பொருள் கட்டமைப்புகள், புத்த மடாலயங்கள், தூபிகள் மற்றும் பாறை கல்வெட்டுகள் என்பன இப்பகுதியில் நீர்ப்பாசன விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாகரிகமொன்றிற்கான சான்றுகளை அளிக்கின்றன.

கி.மு. 500 ஆம் ஆண்டளவில் மன்னன் விஜயன் தரையிறங்கியதாகவும், சிங்கள குடியேற்றங்களை நிறுவியதாகவும் கூறப்படும் தம்பபண்ணி, குதிரைமலை மற்றும் மோதரகம் ஆற்று முகத்துவாரம் ஆகிய இடங்களுக்கு இடையில் WNP இருப்பதாகக் கூறப்படுகிறது.

மரதன்மடுவ குளத்திற்கு வடகிழக்கில் அமைந்துள்ள கல்பாண்டி நீராவிய, மன்னன் துட்டுகமுனுவின் மகன் இளவரசன் சாலியா 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி அசோகமலாவுடன் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. மேலும், பேலியோலிதிக் மற்றும் மெசோலிதிக் போன்ற வரலாற்றுக்கு முந்தைய காலப்பகுதிகளுக்கு உரிய இடங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக இப் பூங்காவானது 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது, ஆனால் மே மாதம் 2009 ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் 2010 பெப்ரவரி மாதம் 27 அன்று, பொதுமக்களின் பார்வைக்காகவும் வரவுக்காகவும் இப் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது.

உள்நாட்டு போரின் போது அதிகளவான சந்தர்ப்பங்களில் பல மோதல்கள் இப் பூங்காவின் அருகிலோ அல்லது அதனை அண்டிய பிரதேசங்களிலோ இடம்பெற்றுள்ளன. இதன் விளைவாக, பூங்காவின் நிர்வாகம், அதன் ஊழியர்கள் உட்பட வனவிலங்குள் பலவும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின. இப்போது பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகள் புனரமைக்கப்பட்டு மற்றும் அதன் நிர்வாகம் என்பன பலப்படுத்தப்பட்டு வருகின்றன, இதனால் வனவிலங்குகள் மீண்டு இப்பிரதேசத்திற்கு வருகை தருகின்றன.

இவ் வனப்பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராமங்களின் தற்போதைய சமூக-பொருளாதார மதிப்புகள் அதிக வேறுபாட்டைக் காட்டுகின்றன; மேற்கு எல்லைகளில் வாழும் மக்கள் முற்றிலும் கழிமுகங்கள் மற்றும் கடலைச் சார்ந்து மீன்பிடித்தலை வாழ்வாதரமாகக் கொண்டுள்ள நிலையில், ஏனைய பகுதிகளில் வாழ்பவர்கள், பிரதான வாழ்வாதாரமாக விவசாயத்தை சார்ந்து வாழ்கின்றனர்.

வில்பட்டை ஆராயுங்கள்

உங்களின் வருகையைத் திட்டமிடுங்கள்

விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டத்தின் படி, பூங்காவிற்குள் வனச்சுற்றுலா ஒன்றிற்காக நுழைய, நீங்கள் பூங்காவின் இரு நுழைவாயில்களில் :ஹுனுவிலகம (அநுராதபுரம்) அல்லது எலுவங்குலம் (புத்தளம்) ஆகிய ஒன்றிலிருந்து அனுமதி பெற வேண்டும்: மேலதிக தகவலுக்கு என்ற பக்கத்தை பார்வையிடவும். 

பிரதான நகரங்களிலிருந்து பூங்காவின் இரு நுழைவாயில்களுக்குமான தூர அட்டவணை: (பூங்கா கட்டணம்)

பிரதான நகரங்களிலிருந்து பூங்காவின் இரு நுழைவாயில்களுக்குமான தூர அட்டவணை:

பிரதான நகரங்கள் அண்ணளவான . தூரம் (கி மீ)
ஹுனுவிலகம
(அநுராதபுரம்)
எலுவங்குலம்
(புத்தளம்)
கொழும்பு 190 165
கண்டி 156 160
அநுராதபுரம் 35 106
புத்தளம் 64 30
காலி 301 283

இப் பூங்கா நாள்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும், ஆனால் வானிலை மாற்றங்களை கருத்திற் கொண்டு அதற்கேற்ப நேர மாற்றங்கள் ஏற்படலாம். பூங்காவிற்குள் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன, மேலும் இவ் ஜீப் வண்டிகள் அதிகபட்ச வேகமாக மணிக்கு 25 கி. மீ என்ற வேகத்தை பராமரிக்க வேண்டும்.

நீங்கள், உங்களது சொந்த வாகனத்தைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், அதில் பூங்கா நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டியொருவர் உங்களுடன் பயணிக்க வேண்டும். பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கவேண்டுமாயின் கும்புக் விலா மற்றும் குதிரைமலை போன்ற நியமிக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே இறங்க முடியும். ஹுனுவிலகம நுழைவாயிலில் அருங்காட்சியகமொன்றும் அமைந்துள்ளது.

தலா 10 பேர் வரை தங்கக்கூடிய ஏழு அடிப்படை சுற்றுலா மனைகள் மற்றும் தேசிய பூங்காவிற்குள் 50 பேர் வரை தங்கக்கூடிய தங்குமிடமொன்றும் உள்ளது. மேலும் துணிகரமிக்க பார்வையாளர்களுக்கு சுதந்திரமாக கூடாரமிட்டு தங்குவதற்கான முகாம் தளங்களும் உண்டு.
சுற்றுலா வீடுகள், தங்குமிடங்கள் மற்றும் முகாமிடும் தளங்களை முன்கூட்டியே இ-சேவை மூலம் அல்லது வனவிலங்கு பாதுகாப்புத் துறையை நேரடியாக தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

இரு பூங்கா நுழைவாயில்களிலிருந்தும் 10 கி.மீ தூரத்திற்குள் பலவிதமான தங்குமிட வசதிகளை நீங்கள் காணலாம். பிரபலமான சுற்றுலா தளங்களான அநுராதபுரம் அல்லது கற்பிட்டியில் அதிகமான விடுதிகள் மற்றும் சொகுசு முகாம்கள் காணப்படுகின்றன.

கற்பிட்டி கடற்கரையானது, கைட் சர்ஃபிங் மற்றும் டொல்ஃபின் மற்றும் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான பிரபலமான சுற்றுலா தலமாகும்.

இதேவேளை அநுராதபுரத்தில் நாட்டின் புராதன காலத்துக்குரிய வரலாற்றுத்தளங்களையும் பார்வையிடலாம்.

சொகுசுமனைகள் மற்றும் தங்குமிடங்கள்

தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாமனை ஒன்றினை முன்பதிவு செய்ய விரும்புகிறீர்களா? தலா பத்து பேர் வரை தங்குவதற்கான வசதிகளையுடைய ஏழு சொகுசு சுற்றுலா மனைகளில் ஒன்றினை அல்லது தங்குமிடமொன்றினை தேர்வு செய்யலாம்.