சுற்றுச்சூழல்
அறிமுகம்
புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் எல்லைகள் வரையிலும் இப் பூங்கா பரவியுள்ளது. வில்பத்து தேசிய பூங்காவனது வடக்கில் மோதரகம், அரு மற்றும் அரவி ஆறுகள், தெற்கில் கலா ஓயா, மேற்கில் போர்த்துக்கல் மற்றும் டச்சு விரிகுடா மற்றும் திறந்த கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. பூங்காவின் வடக்கு எல்லையானது வில்பத்து மேற்கு சரணாலயம் மற்றும் 40,000 ஹெக்டேயர் பரப்பளவிலான மாவில்லு பாதுகாப்பு வனப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது, அதே நேரத்தில் 21,933 ஹெக்டேயர் பரப்பளவிலான தபோவா சரணாலயம் பூங்காவின் தெற்கு எல்லையை ஒட்டியுள்ளது.

வில்பத்து தேசிய பூங்காவின் நிலப்பரப்பானது வறண்ட பசுமைக் காடுகளையும் மற்றும் குற்று முற்புதர்களையும், மேலும் இடைக்கிடையே திறந்தவெளி சமவெளிகளையும் மற்றும் மணல் திட்டுக்களால் அல்லது மணற் படுக்கைகளால் சூழப்பட்ட “வில்லு” என அழைக்கப்படும் 40 பருவகால அல்லது நிரந்தர ஏரிகளையும் கொண்டுள்ளது. “வில்லுகள்” என்பது பொதுவாக நீர் நுழைவு அல்லது வடிகாலற்ற மழை நீரினால் மட்டுமே நிரம்பும் ஆழமற்ற தாழ்நிலங்களில் உருவாகும் ஏரிகளாகும்.
இவ்வில்லுகளினாலேயே “வில்பத்து” அதாவது “ஏரிகளின் நிலம்” என்ற காரணப்பெயரை வழங்குகிறார்கள்:. இவ் ஏரிகளின் பரப்பளவானது 10 ஹெக்டேயருக்கு குறைவானது முதல் 160 ஹெக்டேயர் வரை இருக்கும். மேலும் இது நன்னீர் (உ. ம். கும்புக் வில), உவர் நீர் (உ. ம். காளி வில்லு) அல்லது உப்பு நீர் (கொக்கரி வில்லு) ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். வில்லுகள் முக்கியமாக தேசிய பூங்காவின் மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் அமைந்துள்ளன.
மேலும் இவை பல்வகையான விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. 2013 ஆம் ஆண்டில் வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதன் எல்லையான கடல் மற்றும் தீவுகள் உட்பட 10 கி.மீ தூரத்திற்கு அப்பால் மகாவிலாச்சியா குளம் ஆகியவை வரை ராம்சார் மாநாட்டின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக அறிவிக்கப்பட்டன. இலங்கையின் காலநிலை பொதுவாக உலர் மற்றும் அயனமண்டலத்திற்கு உரித்தானது, இங்கு ஈர (பருவமழை) மற்றும் வரட்சிப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன.
இலங்கையின் காலநிலை பொதுவாக உலர் மற்றும் அயனமண்டலத்திற்கு உரித்தானது, இங்கு ஈர (பருவமழை) மற்றும் வரட்சிப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன.
- உயரம் கடல் மட்டத்திலிருந்து 240 மீட்டர்
- சராசரி ஆண்டு வெப்பநிலை 27.2ºC ஆகும்
- சராசரி ஈரப்பதம் 85% ஆகும்
- சராசரி ஆண்டு மழை சுமார் 1,000 மி.மீ.
- ஈரமான பருவங்கள்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை கடும் பருவமழை, மற்றும் மார்ச் முதல் மே வரை பருவமழைக்கு இடைப்பட்ட குறைந்த மழை
- வறண்ட பருவங்கள்: மே முதல் செப்டம்பர் வரை கடும் வறட்சியான காலநிலை

உயரம் கடல் மட்டத்திலிருந்து 240 மீட்டர்
சராசரி ஆண்டு மழை சுமார் 1,000 மி.மீ.
ஈரமான பருவங்கள்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை, மார்ச் முதல் மே வரை.
வறண்ட பருவங்கள்: மே முதல் செப்டம்பர் வரை விரிவான வறட்சி

உயிரியல் பொக்கிஷங்கள்
பதிவு செய்யப்பட்ட விலங்கினங்கள்::
29 வகையான நன்னீர் மீன்கள்
17 வகையான நிலநீர் வாழ் உயிரினங்கள்
56 வகையான ஊர்வனக்கள்
149 வகையான பறவைகள்
41 வகையான நிலவாழ் பாலூட்டி இனங்கள்
86 வகையான பட்டாம்பூச்சிகள்
வில்பத்து தேசிய பூங்கா சுமார் 70% மண்ணின் தரம் பொறுத்து பல்வேறு உயரத்தில் வறண்ட பசுமையான காடுகள் மற்றும் குற்று முற்புதற்காடுகளால் சூழப்பட்டுள்ளது. வில்லுகளைச் சுற்றி பருவமழை காலத்தில் வெள்ளத்தால் செழிப்படையும் சிறிய புல்வெளிகளும் காணப்படுகின்றன.
வில்பத்துவில் 123 தாவர குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 623 வகையான பூக்கும் தாவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் பூங்காவின் பெரிய மரங்களாக பாலை (மணில்காரா ஹெக்ஸாண்ட்ரா) மற்றும் வீரை (ட்ரைபீட்ஸ் செபரியா) போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நிரந்தரமாக புரண்டோடும் நதிகள் அவற்றின் துணை நதிகள், பருவ காலங்களில் உருவாகும் சிற்றோடைகள் மற்றும் 2,000 ஆண்டுகள் வரை பழமையான நீர்ப்பாசன குளங்களும் இங்குள்ளன. மேலும் கடலோரஉப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் குற்றுச் செடிக்காடுகளும் இங்கிருக்கும் கடற்கரைக்கு பின்னால் உள்ளன.
கலா ஓயா முகத்துவாரத்தின் கரையோரத்தில் இலங்கையின் மிகப்பெரிய சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன. ஆழமற்ற இக் கடற்பகுதியானது அதிகளவான பயன்களைக் கொண்டது. கைவினை மீனவர்களுக்கு துணைபுரிகிறது, மேலும் கடற்புற்களின் படுக்கைகளைக் கொண்டுள்ளது, உலகளவில் அச்சுறுத்தப்பட்ட டுகோங் (டுகோங் டுகோன்) எனப்படும் அவில்லியாக்களுக்கு உணவு அளிக்கிறது.
2003-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் போது, பூங்காவிற்குள் 101 குடும்பங்களைச் சேர்ந்த 284 விலங்கினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 21 உள்ளூர் மற்றும் 30 தேசிய அளவில் அச்சுறுத்தப்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருக்கும் விலங்கினங்களின் விகிதாசார பிரதிநிதித்துவத்தை கருத்திற் கொள்ளும்போது, முதுகெலும்பு உள்ளவைகளில் பறவைகள் அதிகமாகவும் (39%) இருந்தன, அதே நேரத்தில் நிலநீர் வாழ் உயிரினங்கள் மிகக் குறைவாகவே (4%) உள்ளன.
உலகளவில் அழிந்துவரும் அபாயத்துக்கு உட்பட்ட பெரிய பாலூட்டிகள் வாழுமிடமாக இப் பூங்கா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மட்டுமே காணப்படும் அப் பாலுட்டிகளின் துணை இனங்கள் தனித்துவமானவையாகும்: சிறுத்தை (பாந்தெரா பர்தஸ் கோட்டியா), தேன் கரடி (மெலூர்சஸ் உர்சினஸ் இன்னோர்னடஸ்) மற்றும் ஆசிய யானை (எலிபாஸ் மாக்சிமஸ் மாக்சிமஸ்). மேலும் அங்கு பரந்து வாழும் புள்ளி மான் (அக்சிஸ் அக்சிஸ்) கூட்டங்களையும் பூங்கா முழுவதும் காணலாம்.
அத்துடன் அங்கு காணப்படும் சதுப்புநில முதலைகள் (க்ரோக்கடைலுஸ் பலுஸ்ட்ரிஸ்) குறிப்பிடத்தக்க நிலநீர் வாழ் உயிரனமாகும். ஆழமற்ற கடற்பரப்பில் உலகளவில் அச்சுறுத்தப்பட்ட அவில்லியாக்கள் என்றழைக்கப்படும் டுகோங்ஸ் (டுகோங் டுகோன்), இந்தோ-பசிபிக் கூன்முதுகு டால்பின்கள் (சவொசா சினென்சிஸ்) மற்றும் கடல் ஆமைகள் (ஆலிவ் ரிட்லி – லெபிடோசெலிஸ் ஆலிவேசி மற்றும் பச்சை ஆமை – செலோனியா மைடாஸ்) ஆகிய கடலுயிரினங்களும் வாழ்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூங்காவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பின்வரும் உள்ளூர் பறவை இனங்களை அவதானிக்கலாம்: இலங்கையின் காட்டுக்கோழி (கல்லுஸ் லாபாயெட்டி), இலங்கையின் பச்சை நிற புறா (ட்ரெரான் பொம்படோரா), கிரெய் ஹார்ன்பில் எனப்படும் சாம்பல் நிற இருவாச்சி (ஓசிசெரோஸ் கிங்களென்சிஸ்) கருப்புக் கொண்டைக் குருவி அல்லது சின்னான் (பைக்னோநோட்டஸ் மெலனிக்டெரஸ்), கபிலக் கொண்டை சிலம்பன்கள் (பெல்லோர்னியம் ஃபுஸ்கோகாப்பிலம்), இலங்கை தொங்கும் கிளி (லோரிகுலஸ் பெரிலினஸ்), இலங்கை சின்னக் குக்குறுவான் (மெகலைமா ரப்ரிகாபில்லஸ்), செந்நிறமுதுகு மரங்கொத்தி (கிறைசோகோலப்டஸ் ஸ்ட்ரிக்லாண்டி), இலங்கை தகைவிலான் குருவி (ஹிருண்டோ ஹைப்பரித்ரா), மற்றும் இலங்கை காட்டுக் கீச்சான் (டெஃப்ரோடோர்னிஸ் அஃபினிஸ்)
Header banner image : Background vector created by freepik - www.freepik.com